கனமழை எதிரொலி - என்.எல்.சியில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்
தொடர் கனமழை காரணமாக நெய்வேலி என்.எல்.சி.யில், நிலக்கரி வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுரங்க பாதைகள் மற்றும் நிலக்கரி கொண்டு செல்லப்படும் கன்வேயர் பெல்ட்டிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இருப்பினும், போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால், அனல்மின் நிலையங்களில் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.