Senyar Cyclone | TN Rains | நேரம் ஆக ஆக கூடும் பலம் - வருகிறது `ரெண்டாவது’ புயல்
- வங்கக்கடலில் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்த நிலையில், வரும் 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 26 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கி உருவாகும் இரண்டாவது புயலாகும்.
- ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த சென்யார் Senyar என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது.