Rain Update | எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - அடுத்த 2 நாளுக்கான அலர்ட்

Update: 2025-11-25 14:18 GMT

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறதுநாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.27ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.சென்னையில், நாளை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்