Rain Update | அடுத்த ரவுண்டுக்கு தயாரான கனமழை - விடிந்ததும் வந்த அதிமுக்கிய மெசேஜ்.. சென்னை நிலவரம்?
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் 9ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.