Heavy Rain | சத்தம் போடாமல் வந்து தமிழகத்தில் பிரித்தெடுத்த அதிகனமழை - 26 செ.மீ மழை பெய்ததா?
தமிழ்நாட்டில் 3 இடங்களில் அதி கனமழை பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக குன்னூர் பி.டி.ஓ அலுவலகத்தில் 26 செண்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது.இதேபோல, தென்காசி மாவட்டம் கடனா அணை பகுதியில் 24 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் 17 செண்டி மீட்டர் மழையும், ராமநதி அணை, தேனி வீரபாண்டியில் 12 செண்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.