Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது...வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது...
- இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தி, தேர்தலில் வாக்களித்ததாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்...நாடு சுதந்திரம் அடைந்ததும், சர்தார் வல்லபாய் படேல் 28 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், 2 வாக்குகள் மட்டுமே பெற்ற நேரு, பிரதமர் ஆனது தான் வாக்கு திருட்டு என்றும் குற்றம் சாட்டினார்...
- பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வரும் 19ம் தேதிக்குள் பெற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது...மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், இரண்டரை லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் பட்சத்தில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...
- பெரம்பலூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்...உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
- கன்னியாகுமரியை அதிர வைத்த போதை விருந்து சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.. சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்து, 4 நாட்களாக மிகப்பெரிய அளவில் போதை விருந்து நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...