Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.06.2025)

Update: 2025-06-16 08:00 GMT
  • இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027 மார்ச் 1ஆம் தேதி முதல் நடத்தப்படும்...
  • காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு சிற​ப்பு குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
  • அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 47 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு...
  • விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு...
  • நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக, பில்லூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்வு
  • நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகப்பட்சமாக 29.2 செ.மீ மழை பதிவு...
  • கனமழை நீடிப்பதால் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி சுற்றுலா தலம் தற்காலிக மூடல் என வனத்துறை அறிவிப்பு...
  • நீலகிரி மாவட்டம் கூடலூரில் மலைப்பாதையை மறைத்த அடர் மேகமூட்டத்தால் ஓட்டுநர்கள் அவதி....
  • நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 3 வாகனங்கள் சேதம்....
  • நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 3 வாகனங்கள் சேதம்....
  • சோளிங்கரில் பாமக நிர்வாகி சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்...
  • சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு...
  • மதுரையில் அரசு பள்ளி வளாகத்திற்குள் சாக்கடை நீர் புகுந்ததால் மாணவர்கள் சாலையில் அமர வைக்கப்பட்ட அவலம்....
Tags:    

மேலும் செய்திகள்