Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.12.2025) | 6 PM Headlines | ThanthiTV

Update: 2025-12-30 13:05 GMT
  • தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஜனவரி மூன்றாம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது...
  • டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கிறது தமிழக அலங்கார ஊர்தி...மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சவரனுக்கு மூவாயிரத்து 360 ரூபாய் குறைந்துள்ளது...ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 23 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது....ஒரு கிராம் வெள்ளி 258 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
  • புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
  • ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஹோட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த கூடாது...செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது...
  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்..வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க 9 ஆயிரத்து 450 விண்ணப்ப வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
  • வடமாநில இளைஞர் மீதான தாக்குதல் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்..பாதிக்கப்பட்ட நபர் நலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்..
  • வடமாநில இளைஞரை தாக்கிய சிறுவர்கள் தற்போது கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்..தமிழகத்தின் பல மாவட்டங்களில் வட மாநிலத்தவர்கள் உள்ளனர், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்..
  • திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநில இளைஞரை, சிறுவர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம்...4 சிறுவர்கள் மீதும் ரயில்வே போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
  • கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்...கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்....
Tags:    

மேலும் செய்திகள்