Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.12.2025)| 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-12-27 01:02 GMT
  • 2026 ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்...ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது...
  • திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்...2 ஆயிரத்து 95 கோடி ரூபாய் மதிப்பிலான 314 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்...
  • கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை ஜனவரி 5-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய லேப்டாப்கள், 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது...
  • S.I.R பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன...காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர், ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர்...வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க ஆயிரத்து 708 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
  • தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவங்களை முறையாக சமர்ப்பிக்காத 10 லட்சம் பேருக்கு எந்த முறையில் நோட்டீஸ் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது..வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீட்டிற்கே வந்து நோட்டீசை வழங்குவார், ஆவணங்களை வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
  • சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு பெறுவதற்கான அவகாசத்தை நீட்டித்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது...வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..  
  • எம்மதமும் சம்மதம் என்ற மக்களின் ஒற்றுமையை சீர் குலைக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...கள்ளக்குறிச்சியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என்று கூறினார்..
  • காங்கிரஸை போலவே திமுக-விலும் குழு அமைத்த பின்னர், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்...ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், பாஜக அவரை இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளதாகவும் சிதம்பரம் சாடியுள்ளார்...
  • பாமகவில் இருந்து தன்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்...கட்சியில் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார்..
Tags:    

மேலும் செய்திகள்