Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (13.11.2025) | 4 PM Headlines | ThanthiTV
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு சவரன் தங்கம் 95 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
கோவை, நீலகிரி மலைப்பகுதிக்கு இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு...ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்...
ரஜினியை வைத்து இயக்க இருந்த படத்தில் இருந்து சுந்தர்.சி விலகினார்...கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் படத்தில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..
டெல்லியில் கார் வெடிப்பதற்கு 10 மணி நேரத்திற்கும் முன்பாக பதிவான சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது....செங்கோட்டை அருகே சுற்றி திரிந்த உமர், மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணித்த காட்சி பதிவாகி உள்ளது....
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் துண்டான மனித கை கண்டெடுக்கப்பட்டுள்ளது...சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, கை சிக்கியது...
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக எக்கோ ஸ்போர்ட் காரை போலீசார் கைப்பற்றினர்...முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உமரின் கூட்டாளிகள் பயன்படுத்திய மற்றொரு காரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது...
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். வழக்கை இந்திய விசாரணை அமைப்புகள் கையாண்ட விதத்தை அவர் பாராட்டியுள்ளார்...
13 ஆண்டுகள் நிறைவடைந்து 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தந்தி டிவிக்கு குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்...நேர்மையான செய்தி, ஆயுத எழுத்து, மக்கள் மன்றம், கேள்விக்கென்ன பதில் போன்ற நிகழ்ச்சிகள் வழியாக நாட்டின் பிம்பத்தை தொடர்ந்து பிரதிபலிப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்...
தாய் மொழிப்பற்று, மொழி உணர்வை ஊட்டும் தூண்டுகோலாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்...பல ஆண்டுகள் மக்கள் சேவை செய்து, ஊக்குவித்து, ஒன்றிணைக்கும் பணியை தந்தி டிவி தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்...
மக்கள் மன்றத்தில் ஆரோக்கியமான கருத்தாக்கத்தை உருவாக்குவதில் தந்தி டிவியின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்...ஊடகத்துறை மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டிருக்கும் தந்தி டிவியின் ஒட்டுமொத்த குழுவுக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்...
தந்தி டிவி தமிழ் ஊடக உலகின் நம்பகமான குரலாக உள்ளது என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார்...விவாதங்களுக்கான களமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இயங்கி வருவது பாராட்டத்தக்கது எனவும் வாழ்த்தி உள்ளார்..
தந்தி டிவி என்றால், அனைத்து தரப்பு மக்களுக்கும் இடமளிப்பது, நடுநிலையாக செய்திகளை வெளியிடுவது போன்ற அம்சங்களே தமிழக மக்கள் மனதில் தோன்றும்...பெருமதிப்பிற்குரிய சி. பா. ஆதித்தனார் காட்டிய ஊடக வழியில், தந்தி டிவியும் செய்திகளை வழங்கி வருவது சிறப்பானது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்...
தந்தி டிவியின் 13 ஆண்டுகால சேவை மக்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தி உள்ளது...அது பல்லாண்டுகள் தொடர வேண்டும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி உள்ளார்...
ஆம்னி பேருந்து பிரச்சினை தொடர்பாக உரிமையாளர்களுடன் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்...தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியுறுவதாக கூறினார்...