Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (12.06.2025) | 9 PM Headlines | Thanthi TV
புறப்பட்ட ஐந்தே நிமிடத்தில் விபத்தில் சிக்கிய விமானம்..
விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் ஆய்வு...
விபத்தில் சிக்கியது ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் பயணிகள் விமானம் என அறிவிப்பு...
விமான விபத்து குறித்து உள்துறை அமைச்சர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் உடன் பிரதமர் மோடி ஆலோசனை
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த 2 பேர் வெளியிட்ட வீடியோ
விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவ மாணவர் விடுதியில், உணவு அருந்த பயன்படுத்திய தட்டுகள் சிதறிக்கிடந்த காட்சிகள்...
அகமதாபாத் பி.ஜே. மருத்துவ கல்லூரியின் மாணவர் விடுதியில் உள்ள உணவகம் மீது விழுந்து நொறுங்கிய விமானம்...
அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உறவினர்களின் டிஎன்ஏ-வை சேகரிக்க ஏற்பாடு
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் 8 பேர் சிறார்கள்...
விபத்தில் சிக்கிய விமானத்தில் 53 இங்கிலாந்து நாட்டவர் பயணம்...
விபத்தில் சிக்கிய விமானத்தில் 169 இந்தியர்கள் பயணம்...
குஜராத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 204 பேர் பலி என அச்சம்...