சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.... எல்லை பிரச்சினை, அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்....
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை தலைமையேற்று நடத்தும் சீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்...... இந்தியா - சீனா எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாகவும் கூறியுள்ளார்.....
முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி நாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றடைந்தார்.... தமிழ்நாட்டின் வலிமையை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்க இருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....
மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்..... இல.கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்........
மதுரையில் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறவிருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.... முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.....
சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சூடான தார் பட்டு இரண்டரை வயது பெண் குழந்தை காயம் அடைந்தது.... குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்....
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தர்மபுரி,, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.... சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது......
சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 493 கனஅடியாக அதிகரித்துள்ளது..... டெல்டா பாசனத்திற்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.....
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீர்வரத்து சீரானது..... 2 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.....
மேகவெடிப்பால் உருக்குலைந்த காஷ்மீரின் ராஜ்கார் பகுதியின் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன... 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 4ம் சுற்றுக்கு இத்தாலியைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் சின்னர் முன்னேறினார்.... 3ம் சுற்றில் கனடா வீரர் ஷபோவலோவை (Shapovalov) வீழ்த்தினார்....
SCO மாநாட்டை தலைமையேற்று நடத்தும் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை முன்னோக்கி எடுத்துச்செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்... அதனை காணலாம்...