Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (12.12.2025) | 11 AM Headlines | ThanthiTV
- ஆபரணத் தங்கத்தின் விலை ஒருநாளில் சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு சவரன் தங்கம் 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது...சிபிஐ-ன் முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
- ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் மலை சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்...37 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மலை சாலையில் இருந்து கவிழ்ந்த நிலையில், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
- சிவகங்கை அரசு காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் மாயமான நிலையில், ஒரு சிறுமி அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்...மதுரையில் இளைஞர்களுடன் தங்கி இருந்த 2 சிறுமிகளையும் மீட்ட போலீசார், 2 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்...'
- வேளாங்கண்ணியில் பெங்களூரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில், காதலனை வெட்டிவிட்டு பெண்ணை தூக்கி சென்ற சம்பவம்...பெங்களூரு தப்ப முயன்ற காதலியின் தாய், தந்தை உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போலீசார் மணப்பெண்ணை மீட்டனர்...