Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26.09.2025) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2025-09-26 06:05 GMT
  • சென்னை உயர்நீதிமன்றம், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது...மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்துகின்றனர்....
  • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... நெல்லை சுத்தமல்லியில் ஒரு பாதிரியாரை ஊழியம் செய்ய விடாமல் தடுத்து மத மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாகக் கூறி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.... ​
  • நெல்லை டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் அரிவாள் வெட்டப்பட்ட சம்பவம்.... சக மாணவன் மீது 2 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்....
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கோழிக்கு வைத்த குறி தவறியதில் துப்பாக்கி குண்டு பக்கத்துவீட்டில் இருந்து இளைஞர் மீது பாய்ந்த கொடூரம்....துடி துடித்து இளைஞர் உயிரிழந்த நிலையில், தொடர்புடைய நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்