மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.08.2025) ThanthiTV

Update: 2025-08-10 13:08 GMT

பெங்களூருவில் 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி... பள்ளி மாணவர்களுடன் ரயிலில் பயணித்து உற்சாகம்...

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு நமது தொழில்நுட்பமும், 'மேக் இன் இந்தியா' திட்டமும் தான் காரணம் என பிரதமர் மோடி பெருமிதம்... பயங்கரவாதத்தை காப்பாற்ற வந்த பாகிஸ்தானை சில மணி நேரங்களிலேயே மண்டியிட வைத்தோம் என பேச்சு..

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை செஸ் விளையாட்டுபோல் இருந்தது... எதிரியை செக் அண்ட் மேட் செய்ததாக சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கருத்து...

ஆபரேஷன் சிந்தூரில் தங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கருத்து... பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முப்படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் விளக்கம்...

சில முதலாளிகளுக்கு இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமை என அமெரிக்க அதிபர் டிரம்பை மறைமுகமாக விமர்சித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.. பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் விமர்சனம்..

டிஜிட்டலில் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்... 'என் வாக்கு என் உரிமை' என்ற அடிப்படை உரிமையை வாக்குத்திருட்டு கேள்விக்குள்ளாக்குவதாக விமர்சனம்..

பெங்களூருவில் வாக்குத்திருட்டு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்த ராகுல் காந்திக்கு, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையர் நோட்டீஸ்... ராகுல் வழங்கும் ஆவணங்கள் மூலம்

விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி...

வாக்காளர் இறுதி வரைவு பட்டியலில் சேர்க்கப்படாதவர்கள் குறித்த காரணங்களை வெளியிட வேண்டும் என்ற விதி இல்லை... பீகார் சிறப்பு வாக்காளர் இறுதி வரைவு பட்டியல் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்...

புதிய வாக்காளர் பட்டியலில் பீகார் துணை முதல்வர் விஜய் குமாரின் பெயர் 2 இடங்களில் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு... வாக்காளர் பட்டியலில் மோசடியா? அல்லது துணை முதல்வரின் செயலா? எனவும் கேள்வி...

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்... திருப்பூர் மாவட்டத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, அம்பேத்கர் சிலைகளை திறந்து வைக்கிறார்...

Tags:    

மேலும் செய்திகள்