Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.01.2026) | 1 PM Headlines | ThanthiTV

Update: 2026-01-22 08:07 GMT
  • சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஈ.பி.எஸ். இடையே காரசார விவாதம் நடைபெற்றது....23 ஆண்டுகால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் இதனை ஏன் செய்யவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்...
  • கொசுக்களை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தாததால் தமிழகத்தில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்....சட்டப்பேரவையில் திட்டமிட்டே எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் தடுப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்..
  • அரசியல் பொதுவாழ்வில் இருந்தே விலகுவதாக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வுகும் ஓ.பி.எஸ். ஆதரவளாருமான குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்...திமுக-வில் இணையப் போவதாக அறிவித்திருந்த நிலையில், குடும்பத்தினரின் அறிவுரைப்படி அரசியலில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்....
  • சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது....ஒரு கிலோ செவ்வந்தி பூ, பத்து ரூபாயாக குறைந்ததால் விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது....
  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றும் செய்யப்பட்டுள்ளது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் நவீன் வழங்கிட கேட்கலாம்....
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியா வீரர் ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்....ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இத்தாலி வீரர் பிரான்செஸ்கோவை, ஜோகோவிச் எளிதில் வீழ்த்தினார்...
Tags:    

மேலும் செய்திகள்