Eesha Rebba``என் போட்டவ பெருசாக்கி டைரக்டர் அப்படி சொன்னாரு..’’ போல்டாக போட்டு உடைத்த ஈஷா ரெப்பா

Update: 2026-01-22 08:44 GMT

"இயக்குனர் செய்த உருவ கேலி" - உடைத்து பேசிய ஈஷா ரெப்பா

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஈஷா ரெப்பா, திரையுலகில் தான் சந்தித்த உருவகேலி அனுபவங்களை பகிர்ந்துள்ளார். Youtube சேனல் நேர்காணலில் பேசிய ஈஷா ரெப்பா, சினிமாவிற்கு வந்த புதிதில் ஒரு இயக்குனர் தனது புகைப்படத்தை லேப்டாப்பில் பெரிதாக்கி, “முழங்கைகள் கருமையாக இருக்கிறது என்றும்… இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்றும் கூறியதாக வேதனை தெரிவித்துள்ளார். அந்த வார்த்தைகள் தன்னை காயப்படுத்தி, சோர்வடைய செய்ததாகவும் அந்த பேட்டியில் ஈஷா ரெப்பா தெரிவித்துள்ளார். பிறருக்காக தன் பிறப்பை மாற்ற முடியாது என்பதால், இவற்றை புறம்தள்ளி தன்னம்பிக்கையுடன் வாழ பழகியதாகவும் அவர் கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்