Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.11.2025)| 1 PM Headlines| ThanthiTV
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது....
நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது...
வங்கக்கடலில் வரும் 14, 19 ஆகிய தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் புயலாக மாற வாய்ப்பில்லை என கூறியுள்ளது..
தெருநாய்களை கட்டுப்படுத்த 8 வாரங்களுக்குள் தடுப்புகள், வேலிகள் அமைக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.. தெருநாய்களை காப்பகங்களில் அடைத்து தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது...
திமுகவை அழித்து விடலாம் என இன்றைக்கு யார் யாரோ கிளம்பி வந்து கனவு காண்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர்,
எந்த காலத்திலும், யாரும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றார்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது... ஒரு சவரன் தங்கம் 90 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்...
சென்னையில் நடந்த ம.தி.மு.க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், சிலரின் சதி செயல்களால் 2011-ல் அதிமுக உடன் கூட்டணி அமையாமல் போனதாக கூறினார்...
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்... முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோரை நீக்கம் செய்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்....
ஈபிஎஸ் தான் தனக்கு அமைச்சரவையில் இடம் தந்ததாக சொல்வது வேதனை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்..
ஆதரவாளர்கள் நீக்கம் தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈபிஎஸ் முதல்வரான கதை நாடறியும் என்றார்....