Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.12.2025) | 1PM Headlines | ThanthiTV
- அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வரும் நிலையில் பேருந்தின் பிரேக்கை பரிசோதித்த பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு எடுக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.பேருந்து டயர்களில் நட்டுகள் இறுக்கமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
- கிறிஸ்துமசை ஒட்டி வாடிகனில் போப் லியோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது...அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளை விமர்சித்த போப் இந்த உலகம் குழந்தைகள், ஏழைகள் அல்லது பிறநாட்டினரைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று கவலை தெரிவித்தார்.
- புதுச்சேரியில் ரோடமைன் பி கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய மேலும் ஓர் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- நெல்லை மாவட்டம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது...பேருந்தில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், 4 பெண்கள் காயம் அடைந்துள்ளனர்..
- சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...போலீஸ் விசாரணையில் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்...
- சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம் அளித்துள்ளார்...திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் சிலைகளை கடத்தும் திட்டத்தோடு ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...