Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது...கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கும் நிலையில், தொகை வரவு வைப்பு...
- திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றம் கூறிய இடத்தில் தீபம் ஏற்றக் கோரி, நாளை நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம்...உண்ணாவிரதத்தில் ரஜினி ரசிகர் மன்றம் பங்கேற்கும் என, அதன் நகரச் செயலாளர் தெரிவித்துள்ளார்....
- ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் தனது 75வது பிறந்தநாளை நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடினார்...படக்குழுவினருடன் கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்...
- சென்னை மெரினா கடற்கரை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தின் ஈடுபட்டனர்...கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்...
- ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் மலை சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்..37 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மலை சாலையில் இருந்து கவிழ்ந்த நிலையில், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...