டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் தார்யகாஞ் பகுதியில் உள்ள மூன்று அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர், உயிரிழந்த மூன்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.