கோடம்பாக்கம் புலியூர்புரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமாரை, சொத்து பிரச்சினையில் அவரது சகோதரர் எபனேசர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அருகே நில விற்பனை விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் மது அருந்திய நிலையில் எபனேசர் கத்தியால் தாக்கியதால் சசிகுமார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் எபனேசரை கைது செய்தனர். இதற்கிடையே ரத்தக் காயத்துடன் சசிகுமார் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.