Chennai Ear Bite | காணாமல் போன காது.. திடீரென வழிந்த ரத்தத்தை பார்த்து மிரண்டு போன இளைஞர்

Update: 2025-08-07 02:46 GMT

Chennai Ear Bite | காணாமல் போன காது.. திடீரென வழிந்த ரத்தத்தை பார்த்து மிரண்டு போன இளைஞர்

சென்னை வியாசர்பாடி அருகே சண்டையை விலக்கி விட வந்த நபரின் காதை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கக்கன்ஜி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் வீட்டின் அருகே முதியவர் ஒருவரை தாக்கிக் கொண்டிருந்த அஜித் என்ற இளைஞரை தடுத்துள்ளார். அப்போது இளைஞர் அஜித், பாஸ்கரை தள்ளிவிட்டு, அவர் காதை கடித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற பாஸ்கரின் காது ஒரு பகுதி காணாமல் போய், சேதமடைந்து ரத்தம் வந்தபடி இருந்தது. இதனை தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இது குறித்து புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்