பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்..போலீசார் எடுத்த அதிரடி Action
கரூரில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பட்டாசு வெடித்து, பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 6 பேரை போலீசார்
கைது செய்தனர். நல்லதங்காள் ஓடையை சேர்ந்த அஜீத் என்பரவது பிறந்தநாளை, திருக்காம்புலியூர் பகுதியில், சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல், அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்து, மது அருந்தி, கேக் வெட்டி, பட்டாக்கத்தியுடன் கொண்டாடினர்.
இதனை வீடியோவாக பதிவு செய்த அந்த இளைஞர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.
இதன் அடிப்படையில் தினேஷ்குமார், சுரேஷ், சந்துரு உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அஜீத் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.