Thirupattur | Crime | Arrest | இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய காதலன் கைது

Update: 2025-06-20 02:21 GMT

இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய காதலன் கைது

திருப்பத்தூர் அருகே இளம் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில்

கிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காத இளம் பெண் அவரை விட்டு பிரிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் இளம் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருப்பத்துார் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்