குழந்தை இல்லாத இளம் பெண்.. "தனிமையில் பிரார்த்தனை.." - நம்பி கண்களை மூடிய பெண்ணிடம் மதபோதகர் செய்த செயல்
கன்னியாகுமரி அருகே, தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்ற பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கிறிஸ்தவ மதபோதகரை போலீசார் கைது செய்தனர். தக்கலை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணிற்கு குழந்தை இல்லாததால் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபைக்கு பிராத்தனைக்காக சென்றுள்ளார். அங்கு சபை போதகராக இருந்த ரெஜின்மோன், இளம்பெண்ணிடம் தனிமையில் பிராத்தனை செய்யவேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனை நம்பி கண்களை மூடியவாறு பிராத்தனையில் ஈடுபட்ட இளம்பெண்ணை மத போதகர் கட்டி தழுவி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் மத போதகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.