RCB பேரணியில் உயிரிழந்த திருப்பூர் இளம்பெண்ணின் உடல் தகனம்-கதறி துடித்த தாய், உறவினர்கள்
பெங்களூரில் ஆர்.சி.பி. அணி வெற்றி பேரணியில், நெரிசலில் உயிரிழந்த இளம்பெண் காமாட்சியின் உடல், உடுமலையில் தகனம் செய்யப்பட்டது. உடுமலையை அடுத்த மைவாடியை சேர்ந்த இளம்பெண் காமாட்சி, பெங்களுரில் ஆர்.சி.பி. அணி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, அவருடைய உடல், சொந்த ஊரான மைவாடிக்கு கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு உறவினர்களும் முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்திய பின்னர், இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, உடுமலை மின் மயனாத்தில் தகனம் செய்யபட்டது.