யூடியூப் பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த இளைஞர் - வெளியான அதிர்ச்சி பின்னணி

Update: 2025-05-08 03:20 GMT

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இளைஞர் ஒருவர் ’ கல்லூரி மாணவிக்கு யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீத் என்ற இளைஞர் தன்னோடு தங்கி இருந்த கல்லூரி மாணவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்திருக்கிறார்.

அதிக ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், விசாரணை நடத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மாணவியின் வீட்டிற்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். பெற்றோரிடம் கல்லூரியில் படிப்பதாகக் கூறிவிட்டு இளைஞரோடு வாழ்ந்து வந்த பெண் பிரசவமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்