காதல் விவகாரத்தில் சமரசம் பேச வந்த இளைஞரை ஓட ஓட வெட்டி கொலை

Update: 2025-07-09 04:39 GMT

விருதுநகரில் நண்பன் காதல் விவகாரத்தில் சமரசம் பேச வந்த இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர்.சாத்தூர் அருகே ஒத்தையால் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சிங்கேஸ்வரனும்,கண்மாய் சூரங்குடியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெண்ணின் மாமா விஜய பாண்டி எதிப்பு தெரிவித்து வந்துள்ளார்.இதனால் சிங்கேஸ்வரனின் உறவினர் சங்கரேஸ்வரன் என்ற இளைஞர் விஜய பாண்டியை சமரசம் பேச வர சொல்லி இருக்கிறார்.அப்போது சிங்கேஸ்வரன் தன்னுடைய காதலை விட்டு தர மறுத்தால் விஜய பாண்டியும் அவரது நண்பர்களும் சிங்கேஸ்வரனை வெட்ட வந்துள்ளனர்.இதனை உறவினர் சங்கேஸ்வரன் தடுத்ததால் ஆத்திரமடைந்த விஜய பாண்டி, அவரது நண்பர்கள் சங்கேஸ்வரனை ஓட ஓட வெட்டி கொலை செய்து தப்பித்து விட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பித்து சென்றவர்களை கைது செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்