`மவனே இருக்க மாட்ட..'' - கஸ்டமரிடம் மட்டு மரியாதை இல்லாமல் பேசிய பைனான்ஸ் ஊழியர்கள்

Update: 2025-07-22 03:02 GMT

கடன் வாங்கிய கூலி தொழிலாளியை மிரட்டும் நிதி நிறுவன ஊழியர்கள்

நாமக்கல் எருமபட்டியில் கடன் வாங்கிய கூலி தொழிலாளியை, கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. எருமபட்டி அருகே பழனிநகரை சேர்ந்த கூலி தொழிலாளியான சிவசங்கரன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மாதந்தோறும் முறையாக செலுத்தி வந்துள்ளார். சூழ்நிலை காரணமாக கடந்த மாதம் கட்ட முடியவில்லை. இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடுமையான சொற்களால் சிவசங்கரனை திட்டியதோடு, தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறி மிரட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்