"ABCD தெரியும், ஊர்சுத்தி.." - `அடுத்த மாப்பிள்ளை நாங்க.. பொண்ணு இருந்தா தாங்க'
"ABCD தெரியும், ஊர்சுத்தி, கைநாட்டு" - `அடுத்த மாப்பிள்ளை நாங்க..., பொண்ணு இருந்தா தாங்க' - வைரலாகும் திருமண பேனர்
அடுத்த மாப்பிள்ளை நாங்க பொண்ணு இருந்த தாங்க என திரைப்பட வசனம் போல் திருமண வசனத்துடன் திருவண்ணாமலையில் இளைஞர்கள் வைத்த திருமண பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது..
போளூர் அடுத்த ஜவ்வாதுமலை பகுதிக்கு உட்பட்ட பெருங்கட்டூர் மலை கிராமத்தில் கடந்த 14ம் தேதி ஆனந்த்ராஜ், நிமித்ரா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இதை முன்னிட்டு மணமகனின் நண்பர்கள் சார்பில் ஜவ்வாது மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இடம்பெற்றிருந்த அடுத்த மாப்பிள்ளை நாங்க பொண்ணு இருந்தா தாங்க என்ற வரிகள் காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் மணமகனின் நண்பர்கள் 10 பேரின் புகைப்படங்களுக்கு கீழ் திருமண தகுதியாக ABCD தெரியும், ஊர்சுத்தி, கைநாட்டு, என தங்களை பற்றிய விரிவான விவரங்களை நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர்.