"நீங்கள் தான் எனக்கு இறைத்தூதர்கள்.." -முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு..

Update: 2025-07-19 16:40 GMT

"நீங்கள் தான் எனக்கு இறைத்தூதர்கள்.." - 50 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு.. நடிகர் நாசர் நெகிழ்ச்சி பேச்சு

செங்கல்பட்டில் 50 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பில், நடிகர் நாசர் கலந்து கொண்டு நண்பர்கள், ஆசிரியர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, இப்பள்ளியில் 1975ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் நடிகர் சங்க தலைவரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான நாசர், அவருடன் படித்த 70 முன்னாள் மாணவர்கள், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் என அனைவரும்

கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்ட மாணவர்கள் ஒரே மாதிரியான டீ-சர்ட் அணிந்து

ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து நடிகர் நாசர், தனது ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின்னர், தனது பள்ளி கால நினைவுகளை உணர்ச்சி பொங்க கூறியது அனைவரையும் வியக்கும்படி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்