Yemen Issue | மல்லிகை பூவுக்கு இப்படி ஒரு கிராக்கியா..! திணறும் மத்திய கிழக்கு நாடு
மத்திய கிழக்கு நாடான ஏமனில் மல்லிகைப் பூவுக்கு கடும் கிராக்கி நீடிக்கிறது. தோட்டத்தில் விளையும் மல்லிகைப் பூவை விவசாயிகளே பறித்து பொட்டலமிட்டு சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். மதுரை மல்லியை போல ஏமனில் லாஹிஜ் பகுதியில் விளையும் மல்லிக்கு நாடு முழுவதும் பயங்கர கிராக்கி என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் மல்லிகைப்பூ மாலை பிரதான இடம் வகிப்பதால், சிறிய மாலையே சுமார் ஆயிரம் ரியால் முதல் 5 ஆயிரம் ரியால் வரை, அதாவது இந்திய மதிப்பில் 400 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.