உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் சார்பாக ஒரு கோடி ரூபாய்க்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் செஸ் சாம்பியன் குகேஷை கௌரவிக்கும் விதமாக ரூபாய்.1 கோடிக்கான ஊக்கத்தொகை பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.