ஸ்கேட்டிங்கில் உலக சாதனை - மிரள விட்ட 3 வயது சிறுவன்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் வெறும் மூன்றே வயதான சிறுவன் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முருகானந்தம் - ராதிகா தம்பதியின் மகன் மித்ரன் 200 மீட்டர் சுற்றளவு கொண்ட ஸ்கேட்டிங் மைதானத்தை ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் 100 முறை வலம் வந்து புதிய நோபல் வேர்ல்டு ரெக்கார்டு உலக சாதனையை படைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 20கிலோமீட்டருக்கு மேல் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து மிரள வைத்த மித்ரனை பொதுமக்களும் காவல்துறையினரும் பாராட்டி உற்சாகப்படுத்தினர். கேக் வெட்டி மித்ரனின் வெற்றி கொண்டாடப்பட்டது. மித்ரனுக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனர் அரவிந்த் லட்சுமி நாராயணன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்... நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி. சி. ராமசாமி, அரவக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் கபூர், புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.