5 குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெண்கள்.. இருவரிடம் போலீசார் விசாரணை

Update: 2025-04-07 03:08 GMT

மத்திய பேருந்து நிலையத்தில் குழந்தைகளை வைத்து பெண்கள் பிச்சை எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய பேருந்து நிலையம், புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண உடையில் குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிச்சை எடுத்த 3 சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தையை வைத்து பிச்சை எடுத்த 2 பெண்களையும் பிடித்தனர். தொடர்ந்து 5 குழந்தைகளையும் மீட்ட போலீசார் 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்