தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மஞ்சாவடி, கோம்பூர் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி திருவிழா நடத்துவது வழக்கம். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் தலை எடுக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது குழந்தை இல்லாத பெண்கள், குழந்தை வரம் வேண்டி ரத்த சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.