விழுப்புரம் மாவட்டம் மாரக்காணம் அடுத்துள்ள தாழங்காடு கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் 30 வயது மதிக்கத் தக்க பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த நிலையில் அவரது கணவனை போலீஸார் தேடிவருகிறார்கள்
சில நாட்களுக்கு முன்னதாக பெருமாள் என்பவர் வெளியூரிலிருந்து வந்து தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு மாந்தோப்பில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி சடலமாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில் குழந்தைகளோடு தப்பி ஓடிய பெருமாளை போலீஸார் தேடிவருகிறார்கள்