ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த பெண் - தி.மலையில் அதிர்ச்சி

Update: 2025-07-09 04:52 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 12 பேர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. வெளி மாநிலத்தை சேர்ந்த அப்பெண் கோயிலுக்கு சென்றுவிட்டு தனது பைக்கை எடுப்பதற்காக அங்கு வந்துள்ளார்.அப்போது ஆட்டோ குறுக்கே இருந்ததால் பைக்கை எடுக்க முடியாமல், ஓட்டுநரிடம் ஆட்டோவை சிறிது தூரம் நகர்த்தும்படி கூறியுள்ளார். இதன் பிறகு ஏற்பட்ட தகராறில் அப்பெண் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததால் 6 பேருக்கு உடல்நலம் பாதித்துள்ளது.மேலும் இது குறித்து புகார் அளிக்க சென்றபோது போலீசார் விசாரணை நடத்தாமல் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்