சென்னை கே.கே. நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள தனியார் லாக்கரில் வைத்திருந்த 92 கிராம் தங்க நகைகள் காணாமல் போனதாக, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செல்வி என்பவர் சமீபத்தில் லாக்கரை திறந்து பார்த்த போது, தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து புகாரளித்த நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.