Elephant || வீடுகளை சூறையாடும் காட்டு யானைகள் - தெருக்களில் அலைந்து திரிவதால் அலறிபோன பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள பகுதியில் காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கூடலூரை சுற்றி உள்ள நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் உலா வரும் காட்டுயானைகள், பொதுமக்களை அச்சிறுத்தியும், வீடுகளை உடைத்துச் சேதப்படுத்தியும் வருகின்றன. இதன் விளைவாக வெளியே நடமாட முடியாததால், வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இரண்டு யானைகள் அப்பகுதியில் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.