கடுப்பாகி துரத்திய யானை.. அலறி ஓடிய பக்தர்கள்.. அதிர்ச்சி காட்சி

Update: 2025-04-06 05:28 GMT

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உணவு தேடி வந்த காட்டு யானை, பக்தர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோயில் வளாகத்தில் திடீரென காட்டு யானை ஒன்று நுழைந்தது. பின்னர் அன்னதான கூடத்திற்கு சென்ற யானை, பக்தர்களுக்கு வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டது. அப்போது பக்தர்கள் வீடியோ எடுத்த நிலையில், அவர்களை விரட்ட தொடங்கியது. அச்சமடைந்த பக்தர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் யானை அடர்வனத்திற்குள் விரட்டப்பட்டது. இது குறித்து பேசிய வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையிடம் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்