திருநெல்வேலி அருகே குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் பிரச்சனை முற்றி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் மீது முத்துலட்சுமி கொதிக்க வைத்திருந்த எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இந்த தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.