ராணுவ வீரரை உறவினர்களை வைத்தே கொன்ற மனைவி, மாமியார் - ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-05-31 03:40 GMT

Arani Crime| ராணுவ வீரரை உறவினர்களை வைத்தே கொன்ற மனைவி, மாமியார் - ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்

திருவண்ணாமலை ஆரணி அருகே ராணுவ வீரரை அடியாட்களை வைத்து கொலை செய்து விட்டு தலைமறைவான மனைவி மற்றும் மாமியார் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தேன்மலைபட்டியை சேர்ந்த ராஜேஷ் என்ற ராணுவ வீரர், தாய் வீட்டில் இருந்த மனைவி சங்கீதாவை அழைக்க சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கீதாவின் சகோதரர் சதிஷ்குமார் என்பவர் உறவினர்கள் உள்ளிட்ட 7 பேருடன் சேர்ந்து ராஜேஷை அடித்து கொன்று கிணற்றில் வீசியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்து சிறையில்அடைத்தனர். இந்நிலையில், தலைமறைவான சங்கீதா அவரது தாயார் இந்திராணி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்