``ஆத்தி.. எத்தா தண்டி'' - மரம் ஏறிய மலைப்பாம்பு.. தலைசுற்ற வைக்கும் அதிர்ச்சி வீடியோ
குமரி மாவட்டம் உலகன்விளை பகுதியில் இருந்த ஒரு மரத்தின் மீது ராட்சத மலைப்பாம்பு ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்த பகுதியில் மலைப்பாம்பைக் கண்டவர்கள் வீடியோ ஆதாரத்துடன் வனத்துறையினர் தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்தில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராட்சத மலைப்பாம்பைப் பிடித்த வனத்துறையினர், அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.