இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் யார்? - வியக்க வைத்த சொத்து பட்டியல்!

Update: 2025-08-24 09:07 GMT

இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் யார்? - வியக்க வைத்த சொத்து பட்டியல்!

இந்தியாவிலேயே பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் ADR, இந்தியாவின் பணக்கார முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 931 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு Pema Khandu , 332 கோடி ரூபாய் சொத்துகளுடன் 2-வது இடத்திலும்,

கர்நாடக முதல்வர் சித்தராமையா, 51 கோடி ரூபாயுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

8 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 14-வது இடத்தில் உள்ளார்.

15 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்