ஏற்காடு கோடை விழா எப்போது ஆரம்பம் - அமைச்சர் ராஜேந்திரன் அறிவிப்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்காடு கோடை விழா தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் ஏற்காடு கோடைவிழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிக்கு கூடுதல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்ததை தொடர்ந்து, ஏற்காடு அண்ணா பூங்காவில் 1.5 லட்சம் மலர்களாலான மலர்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்காடு விடுதிகளில் கோடை விழாவை பயன்படுத்தி, கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.