``விஜய் பக்கத்துல போகும்போது.. என் தலைல துப்பாக்கி வச்சது சந்தோஷமா இருக்கு’’
தலையில் துப்பாக்கி வைத்த விவகாரம் - விஜய் ரசிகர் விளக்கம்
பாதுகாப்பை மீறி தவெக தலைவர் விஜய்யை பார்க்க சென்ற ரசிகரின் தலையில் சிஆர்பிஎஃப் வீரர் துப்பக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு மதுரை விமான நிலையம் வந்தார் விஜய். அங்கு ரசிகர்கள், தொண்டர்கள் பலர் கூடி வரவேற்பு அளித்த நிலையில் மதுரையை சேர்ந்த ரசிகர் இன்பராஜ் கூட்டத்தில் விஜய்யிடம் திடீரென நெருங்கினார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர், இன்பராஜின் தலையில் துப்பாக்கி வைத்து தடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த இன்பராஜ், தலைவரின் பாதுகாப்பிற்காக செய்த ஒன்று தான் என தெரிவித்தார்...