Auto wheeling || ஆட்டோவில் `வீலிங் சாகசம்' - அட்டகாசத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் - வைரலான இன்ஸ்டா வீடியோ
சென்னையில் சாலையில் அதிவேகமாக ஆட்டோக்களை இயக்கியும், சாகசங்களில் ஈடுபடக்கூடிய வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலானது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து ஆட்டோவில் பதிவெண்ணை வைத்து நடத்திய விசாரணையில், பெருங்குடியில் ஆட்டோ சாகசங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதனையடுத்து துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார் ஆட்டோ சாகசத்தில் ஈடுபட்டு வீடியோவை பதிவிட்ட துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்தனர். துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் மற்றும் சாகசங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த அபராதம் விதித்தனர். பின்னர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.