தமிழகமே விளையாட்டாக சொன்னது நிகழ்ந்தே விட்டது - உருவானார் முதல் `டிஜிட்டல் பிச்சைக்காரர்’
உருவானார் தமிழகத்தின் முதல் `டிஜிட்டல் பிச்சைக்காரர்’
வாணியம்பாடி அருகே கையில் (QR CODE)கியூஆர் கோடுடன் டிஜிட்டல் முறையில் யாசகம் எடுக்கும் நபரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் செல்வமணி என்பவர் கியூஆர் கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு டிஜிட்டல் முறையில் யாசகம் எடுத்து வருகிறார். டிஜிட்டல் மூலமே பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், வங்கிக்கணக்கு துவங்கி கிய ஆர் கோடு பெற்று அதன் மூலம் யாசகம் பெற்று வருவதை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
டிஜிட்டல் முறையிலேயே பலர் யாசகம் செலுத்துவதாகவும் வருங்காலத்தில் பல யாசககாரர்கள் இதையே பின்பற்றுவர் எனவும் செல்வமணி தெரிவித்துள்ளார்.